'மம்பட்டியான்' பாடலுக்கு வைப் செய்த டூரிஸ்ட் பேமிலி படக்குழு!

குடும்பக் கதைக்களத்தில் வெளியான இப்படம் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
'மம்பட்டியான்' பாடலுக்கு வைப் செய்த டூரிஸ்ட் பேமிலி படக்குழு!
Published on

சென்னை,

சசிகுமார் நடிப்பில் கடந்த மே 1-ந் தேதி வெளியான படம் 'டூரிஸ்ட் பேமிலி'. இந்த படத்தினை அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ளார். இதில் நடிகை சிம்ரன் கதாநாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தினை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

இலங்கை தமிழர்களான சசிகுமார் குடும்பம் அங்குள்ள பொருளாதார சூழல் காரணமாக தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். அதன்பிறகு அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையுடனும், எமோஷ்னலுடனும் படம் பதிவு செய்துள்ளது. குடும்பக் கதைக்களத்தில் வெளியான இப்படம் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இப்படத்தின் ஒரு காட்சியில் மம்பட்டியான் பாடல் இருக்கும், அதில் நடிகர் சசிகுமார் தனது இரு மகன்களுடன் நடனமாடும் காட்சி இடம்பெற்றிருக்கும். இந்த நிலையில், அந்த பாடலுக்கு படக்குழுவினர் அனைவரும் நடனமாடி வைப் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com