காதலியை கரம்பிடித்த “டூரிஸ்ட் பேமிலி” பட இயக்குனர்


காதலியை கரம்பிடித்த “டூரிஸ்ட் பேமிலி” பட இயக்குனர்
x
தினத்தந்தி 31 Oct 2025 2:09 PM IST (Updated: 1 Nov 2025 1:40 AM IST)
t-max-icont-min-icon

‘டூரிஸ்ட் பேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் திருமணம் இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கி இருந்தார்.இப்படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டினர். மேலும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இப்படம் வசூலையும் குவித்தது. முதல் படத்திலேயே பாராட்டுகளை பெற்ற இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் அடுத்து எந்த நடிகரை வைத்த படம் இயக்குவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரே கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.அபிஷன் ஜீவின்ந்த் கதாநாயகமான அறிமுகமாகும் படத்தை ‘டூரிஸ்ட் பேமிலி’யின் இணை இயக்குநர் மதன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு சமீபத்தில் போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது. இந்த படத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் புரோமோஷன் நிகழ்வில், மேடையில் தனது நீண்ட நாள் காதலியான அகிலாவிடம் அக்டோபர் 31ம் தேதி திருமணம் செய்ய சம்மதமா? என கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பள்ளி தோழியான அகிலாவுடனான நட்பு பின்பு காதலாக மாறியது. இந்நிலையில் இருவீட்டாரின் சம்மதத்துடன் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் - அகிலா திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது.

முன்னதாக நேற்று கிரீன் பார்க் ஸ்டார் ஹோட்டலில், நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், நடிகர்கள் சசிகுமார், சிவகார்த்திகேயன், எம் எஸ் பாஸ்கர் , ரமேஷ் திலக், நடிகைகள் சிம்ரன்,அனஸ்வரா விஜயன், சவுந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ் பசிலியான், அருண் விஷ்வா, இயக்குநர்கள் 'பூ' சசி, ரஞ்சித் ஜெயக்கொடி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் தயாரிப்பாளர் மகேஷ் திருமண பரிசாக பிஎம்டபிள்யூ காரை சமீபத்தில் பரிசளித்தார்.

1 More update

Next Story