கதாநாயகனாகும் "டூரிஸ்ட் பேமிலி" இயக்குநர்


கதாநாயகனாகும் டூரிஸ்ட் பேமிலி இயக்குநர்
x

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார்.

சென்னை,

சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான படம்'டூரிஸ்ட் பேமிலி'. கடந்த மே மாதம் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கி இருந்தார். இப்படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டினர். மேலும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இப்படம் வசூலையும் குவித்தது.

முதல் படத்திலேயே பாராட்டுகளை பெற்ற இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் அடுத்து எந்த நடிகரை வைத்த படம் இயக்குவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரே கதாநாயகனாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அபிஷன் ஜீவின்ந்த் கதாநாயகமான அறிமுகமாகும் படத்தை 'டூரிஸ்ட் பேமிலி'யின் இணை இயக்குநர் இயக்க உள்ளதாகவும் இப்படத்தின் கதாநாயகியாக மலையாள நடிகை அனஸ்வர ராஜன் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்திற்கு, "கரெக்டட் மச்சி" எனப் பெயரிட்டுள்ளனராம்.

1 More update

Next Story