’அரசன்’ படத்தில் இணைந்த ’டூரிஸ்ட் பேமிலி’ நடிகை - வைரலாகும் புகைப்படம்


Tourist Family fame Yogalakshmi joins Arasan
x

`அரசன்' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சிம்புவுடன் விஜய் சேதுபதி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை,

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு அரசன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வடசென்னை கதைகளத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சமுத்திரகனி , கிஷோர் , விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

கோவில்பட்டியில் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கி இருக்கிறது. இந்நிலையில், `அரசன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சிம்புவுடன் விஜய் சேதுபதி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் ’டூரிஸ்ட் பேமிலி’ பட நடிகை யோகலட்சுகியும் காணப்படுகிறார். இதன் மூலம் அரசன் படத்தில் அவர் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.



1 More update

Next Story