ஓராண்டை நிறைவு செய்த “டூரிஸ்ட் பேமலி” - படப்பிடிப்பு வீடியோவை பகிர்ந்த அபிஷன் ஜீவிந்த்

‘டூரிஸ்ட் பேமலி’ படத்தின் ஓராண்டு நிறைவைத் தொடர்ந்து இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது இன்ஸ்டா பக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
ஓராண்டை நிறைவு செய்த “டூரிஸ்ட் பேமலி” - படப்பிடிப்பு வீடியோவை பகிர்ந்த அபிஷன் ஜீவிந்த்
Published on

சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவான ‘டூரிஸ்ட் பேமலி’ திரைப்படம் கடந்தாண்டு மே 1-ந் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இலங்கை தமிழர்களான சசிகுமார் குடும்பம் அங்குள்ள பொருளாதார சூழல் காரணமாக தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். அதன்பிறகு அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையுடனும், எமோஷனலுடனும் படம் பதிவு செய்தது.

சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜமவுலி, நானி, கிச்சா சுதீப் ஆகியோர் படத்தை பாராட்டினர். அதனை தொடர்ந்து நடிகர் சூர்யா, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்தை நேரில் அழைத்து பாராட்டினர். இந்தப் படத்துக்கு கிடைத்த அமோக வரவேற்பில் அவர் நாயகனாகவும் ‘வித் லவ்’ படத்தில் நடித்து கதாநாயகன் ஆனார்.

சர்வதேச திரைப்பட விமர்சன தளம் ‘லெட்டர்பாக்ஸ்ட்’ வெளியிட்ட பட்டியலில் ‘டூரிஸ்ட் பேமலி’ படம், 6-ம் இடத்தை பெற்றது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தமிழ் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.‘டூரிஸ்ட் பேமலி’ படத்திற்கு சென்னை திரைப்பட விழாவில் விருது கிடைத்தது. 98-ஆவது ஆஸ்கர் விருதில் சிறந்த படத்துக்கான பட்டியலில் தேர்வாகியிருந்தது.

இந்த நிலையில், ‘டூரிஸ்ட் பேமலி’ ஓராண்டு நிறைவை முன்னிட்டு படத்தின் படப்பிடிப்பு வீடியோவை இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, “என் வாழ்க்கையை மாற்றிய திரைப்படம்” என பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com