என்.டி.ஆர்- நீல் திரைப்படத்திலிருந்து விலகிய டொவினோ தாமஸ்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ‘என்டிஆர்- நீல்’ படம் ஜூன் 25ம் தேதி வெளியாகிறது.
என்.டி.ஆர்- நீல் திரைப்படத்திலிருந்து விலகிய டொவினோ தாமஸ்
Published on

கே.ஜி.எப்., கே.ஜி.எ. 2 ஆகிய படங்களை தொடர்ந்து இந்தியா முழுவதும் ஹீரோக்களால் அதிகம் விரும்பப்படும் இயக்குனராக பிரசாந்த் நீல் மாறியுள்ளார்.

ஜூனியர் என்.டி.ஆரின். 31வது படத்தை பிரசாந்த் நீல் இயக்குவார் என்று அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

நடிகர் டொவினோ தாமஸ் நரிவேட்டை திரைப்படத்தைத் தொடர்ந்து பள்ளிச்சட்டாம்பி என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இது, ஏப்ரல் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பிரீயட் காலமாக உருவான இப்படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் என்டிஆர் நடிக்கும் புதிய திரைப்படத்தில் டொவினோ தாமஸ் வில்லனாக நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், படப்பிடிப்பு தேதி நெருக்கடி காரணமாக பிரசாந்த் நீல் படத்திலிருந்து டொவினோ விலகியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com