

டொவினோ தாமஸ் நடிப்பில் கடந்தாண்டு ஐடெண்டிட்டி, நரிவேட்டை மற்றும் லோகா திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து டொவினோ தாமஸ், மலையாள இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பள்ளிச்சட்டம்பி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், நடிகை கயாது லோஹர் நாயகியாக நடித்துள்ளார்.
மலையாள திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் விஜயராகவன், சுதீர் கரமானா, பாபுராஜ், வினோத் கெடமங்களம், பிரசாந்த் அலெக்ஸாண்டர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
1980-களில் கிறிஸ்துவ தேவாலயத்தின் பாதுகாப்பிற்காக ஊருக்குள் அழைத்து வரப்படும் நாயகனை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில், பிரபல நடிகர் பிருத்விராஜ் சுகுமாறன் சிறப்புத் தோற்றத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
இந்நிலையில், ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் 2 நாட்களில் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இப்படத்துக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகியுள்ளதை தொடர்ந்து இப்படத்தின் வெற்றியை அறிவிக்கும் விதமாகப் புதிய டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் கடந்த 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது.