டொவினோ தாமஸின் “முன்பே” படத்தின் படப்பிடிப்பு நிறைவு

சைஜூ ஸ்ரீதரன் இயக்கும் ‘முன்பே’ திரைப்படத்தில் டொவினோ தாமஸ் நாயகனாக நடிக்கிறார்.
டொவினோ தாமஸின் “முன்பே” படத்தின் படப்பிடிப்பு நிறைவு
Published on: 

டொவினோ தாமஸ் நடிக்கும் ‘முன்பே’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ் 'மாரி, மின்னல் முரளி' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். விதவிதமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும் டோவினோ தாமஸுக்கு மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல், தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் பிருத்விராஜ் இயக்கத்தில் ‘எல் 2 எம்புரான்’ படத்தில் நடித்துள்ளார்.

டொவினோ தாமஸ் நடித்த ஏஆர்எம் , ஐடெண்டிட்டி, நரிவேட்டை, லோகா திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இறுதியாக ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இவரது ஏஆர்எம் திரைப்படம் ரூ. 100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சைஜூ ஸ்ரீதரன் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘முன்பே’ எனப் பெயரிட்டுள்ளனர். பனோரமா ஸ்டூடியோஸ் உடன் இணைந்து டொவினோவும் இப்படத்தைத் தயாரிக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

இந்நிலையில், ‘முன்பே’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. விரைவில் இப்படம் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

X