’துரந்தர் 2’வுடன் மோதல் - கருத்து தெரிவித்த ’டாக்ஸிக்’ பட நடிகை

இவ்விரு படங்களும் மார்ச் 19-ம் தேதி வெளியாக உள்ளன.
’துரந்தர் 2’வுடன் மோதல் - கருத்து தெரிவித்த ’டாக்ஸிக்’ பட நடிகை
Published on

சென்னை,

நடிகை ஹூமா குரேஷி, தற்போது டாக்ஸிக் படத்தில் எலிசபெத் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம், ரன்வீர் சிங்கின் துரந்தர் 2 படத்துடன் ஒரே நேரத்தில் வெளியாக இருப்பதால், இந்த ஆண்டின் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் மோதலாக பார்க்கப்படுகிறது.

இந்த மோதல் குறித்து ஹூமா பேசுகையில், “எப்படி பார்த்தாலும் இது இந்திய திரைப்படத் துறைக்கு வெற்றிதான். பார்வையாளர்களுக்கு இது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்” என்றார்.

‘டாக்ஸிக்’ படத்தை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். இந்த கேங்க்ஸ்டர் படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.

Also Read
காதல் பிரச்சினையா? - பிரபல யூடியூபர் தற்கொலை
’துரந்தர் 2’வுடன் மோதல் - கருத்து தெரிவித்த ’டாக்ஸிக்’ பட நடிகை

மறுபுறம், ‘துரந்தர்’ படத்தின் தொடர்ச்சியான ‘துரந்தர் 2’-ல் ரன்வீர் சிங் உடன் அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், ஆர். மாதவன் உள்ளிட்ட நடிகர்கள் மீண்டும் நடிக்கிறார்கள். மேலும் யாமி கவுதம், விக்கி கௌஷல், இம்ரான் ஹாஷ்மி ஆகியோரும் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்விரு படங்களும் மார்ச் 19-ம் தேதி வெளியாக உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com