'டாக்சிக்' படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தை நிராகரித்த முன்னணி நடிகை... யார் தெரியுமா?

'டாக்சிக்' திரைப்படத்தில் யாஷுடன் இணைந்து ஐந்து முன்னணி நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நயன்தாரா
Published on

சென்னை,

'டாக்சிக்' படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்தை முன்னணி நடிகை கரீனா கபூர் நிராகரித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

'டாக்சிக்'

'கேஜிஎப் சாப்டர் 2' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் 'டாக்சிக்'. பலமுறை ஒத்திவைக்கப்பட்ட இந்த அதிரடி ஆக்சன் திரைப்படம், இறுதியாக ஆகஸ்ட் 26-ம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாள திரையுலகின் முன்னணி பெண் இயக்குநரான கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இத்திரைப்படம், இந்திய மொழிகள் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் உலகளவில் வெளியாக இருக்கிறது.

ஐந்து முன்னணி நடிகைகள்

'டாக்சிக்' திரைப்படத்தில் யாஷுடன் இணைந்து ஐந்து முன்னணி நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதன்படி, நயன்தாரா , கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி முதன்மை கதாநாயகியாக யாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அண்ணன்-தங்கை பாசம்

படம் முழுக்க அதிரடி ஆக்சன் மற்றும் மாஸான காட்சிகள் நிறைந்திருந்தாலும், கதையின் மையக்கருவாக அண்ணன்-தங்கை பாசம் (சென்டிமென்ட்) இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் நடிகர் யாஷுக்கு தங்கையாக நயன்தாரா நடித்துள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரீனா கபூர் தவறவிட்ட வாய்ப்பு

இப்படத்தில் நயன்தாரா நடித்துள்ள இந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, முதலில் பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு வாய்ப்பு சென்றதாக தெரிகிறது. ஆனால், சில காரணங்களால் கரீனா கபூர் இந்த வாய்ப்பை மறுக்கவே, அந்த கதாபாத்திரத்தில் நயன்தாரா ஒப்பந்தமானதாக கூறப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com