‘டாக்ஸிக்’ - ஹுமா குரேஷியின் பர்ஸ்ட் லுக் வெளியீடு


Toxic poster reveals Huma Qureshi ’s glamorous new avatar as Elizabeth
x
தினத்தந்தி 28 Dec 2025 2:45 PM IST (Updated: 28 Dec 2025 2:45 PM IST)
t-max-icont-min-icon

‘டாக்ஸிக்’ படம் அடுத்தாண்டு மார்ச் 19-ம் தேதி வெளியாகிறது.

சென்னை,

‘டாக்ஸிக்’ படத்தில் 'எலிசபெத்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஹுமா குரேஷி.

நடிகர் யாஷ் தனது 19-வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘டாக்ஸிக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை பிரபல நடிகை கீது மோகன் தாஸ் இயக்குகிறார்.

இதில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா உட்பட பலர் நடிக்கின்றனர். கேவிஎன் புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படம் அடுத்தாண்டு மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் கதாநாயகியான கியாரா அத்வானியின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தநிலையில், தற்போது ‘டாக்ஸிக்’ படத்திலிருந்து ஹுமா குரேஷியின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. இதில், 'எலிசபெத்' என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.

1 More update

Next Story