’டாக்ஸிக்’ டீசர் சர்ச்சை...நடிகை எடுத்த அதிரடி முடிவு

நடிகர் யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 8-ம் தேதி ’டாக்ஸிக்’ டீசர் வெளியானது.
சென்னை,
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடித்துள்ள படம், ‘டாக்ஸிக்’. ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. மார்ச் 19-ல் ரிலீஸாகும் இப்படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹுமா குரேஷி, ருக்மணி வசந்த், தாரா சுதாரியா உள்பட பலர் நடித்துள்ளனர்.
இதற்கிடையில், நடிகர் யாஷின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 8-ம் தேதி இதன் டீசர், வெளியானது. அதில் இடம்பெற்ற காட்சிகள், எதிர்மறை விமர்சனத்தை ஏற்படுத்தின. குறிப்பாக, காரில் பெண் ஒருவருடன் யாஷ் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிக்கு எதிர்ப்பு கிளம்பியது. டீசருக்கு எதிராக புகாரும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், டீசர் சர்ச்சையை தொடர்ந்து அந்த காட்சியில் நடித்திருந்த நடிகை பீட்ரிஸ் டாபென்பாக் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்கியதாக தகவல் வெளியாகி வருகிறது.






