கன்னட பட வரலாற்றில் முதல்முறை...தமிழ்நாட்டில் சாதனை படைத்த ’டாக்ஸிக்’

’டாக்ஸிக்’ படம் மார்ச் 19-ம் தேதி வெளியாக உள்ளது.
கன்னட பட வரலாற்றில் முதல்முறை...தமிழ்நாட்டில் சாதனை படைத்த ’டாக்ஸிக்’
Published on

சென்னை,

யாஷின் ‘கேஜிஎப்’ படங்கள் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ திரைப்படமும் அதே மாயாஜாலத்தை மீண்டும் நிகழ்த்தத் தயாராகி வருகிறது.

இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கி உள்ள இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமைகள் பல கோடிக்கு விற்பனையாகியுள்ளது. கிடைத்த தகவலின்படி, சுமார் ரூ.63 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம், கன்னட திரைப்பட வரலாற்றில் தமிழக சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்ட படமாக ‘டாக்ஸிக்’ புதிய சாதனை படைத்துள்ளது.

Also Read
2 வயதில் தொடங்கிய பயணம்…இன்று ஆஸ்கர் மேடையில் எல் பேனிங்
கன்னட பட வரலாற்றில் முதல்முறை...தமிழ்நாட்டில் சாதனை படைத்த ’டாக்ஸிக்’

யாஷின் மாஸ் இமேஜ் மற்றும் தமிழ் ரசிகர்களிடையே கன்னட படங்களுக்கு உள்ள வரவேற்பை கருத்தில் கொண்டு இந்த பெரிய தொகைக்கு உரிமைகள் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்படம் மார்ச் 19-ம் தேதி வெளியாக உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com