போக்குவரத்து விதிமீறல்: நடிகர் விஜய்-க்கு ரூ.500 அபராதம்..!!

நடிகர் விஜய்-யின் கார் சிக்னலில் நிற்காமல் சென்றதால் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
போக்குவரத்து விதிமீறல்: நடிகர் விஜய்-க்கு ரூ.500 அபராதம்..!!
Published on

சென்னை,

கடந்த மாதம் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்த முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கி நடிகர் விஜய் கௌரவித்தார்

இந்நிலையில் சென்னை பனையூரிலுள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில், 234 தொகுதியைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில், சுமார் 2 மணி நேரம் அந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கும் விழாவை சிறப்பாக நடத்தியதற்கு நன்றிகளை தெரிவித்தும், உங்களுடைய மாவட்டங்களில் முக்கிய பிரச்சினைகள் என்னென்ன.? எனவும், மக்கள் மன்றத்தின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து மாவட்ட வாரியாக கேட்டறிந்தாக கூறப்பட்டது. தொடர்ந்து நிர்வாகிகளின் நலனை கேட்டறிந்தும் அவர்களுடன் புகைப்படங்களையும் விஜய் எடுத்துக்கொண்டார்.

இந்நிலையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக நடிகர் விஜய்-க்கு ரூ.500 அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சிக்னலை மதிக்காமல் விஜய்-யின் கார் சென்றதாக புகார் எழுந்தநிலையில் போக்குவரத்து போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com