சூர்யாவின் ஜெய்பீம் படத்தின் டிரெய்லர் தேதி அறிவிப்பு

நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
சூர்யாவின் ஜெய்பீம் படத்தின் டிரெய்லர் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

நடிகர் சூர்யா நடிப்பில் டைரக்டர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெய்பீம். நவம்பர் 2ம் தேதி அமேசான் பிரைமில் ஜெய்பீம் வெளியாகிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசை அமைத்திருக்கிறார்.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. யூடியூபில் இதுவரை ஒன்றரை கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்து ட்ரெண்டிங்கிலும் இருக்கிறது.

இந்த நிலையில் ஜெய் பீம் படத்தின் ட்ரைலர் வரும் அக்டோபர் 22-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com