

சென்னை,
ஆன்லைனில் வெளியிடப்படாத நிலையில், திரையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எல்ஈடி திரைகளில் மட்டும் டிரெய்லர் வெளியிடப்பட்டது.
'அமரன்' திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய படம் 'ஓம்'. தனுஷின் 55-வது படமாக உருவாகும் இதனை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மலையாள நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்திலும், பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ருதீன் ஷா தமிழில் நடிப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
'ஓம்' திரைப்படம் முதலில் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு, நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. இந்த படத்தினை தியேட்டரில் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
'OM CHAPTER: 1 UDHIRAM THE BLOOD WOOD' நிலையில், தணிக்கைக் குழு பிரச்சினைகளால், 'ஓ.எம் ஆபரேஷன் மோல்' என்று தலைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தணிக்கைக் குழுவின் சில எதிர்ப்புகள் மற்றும் பிரச்சினைகள் காரணமாக இந்தத் டைட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று ஒன்றரை மணி நேர தாமதத்திற்குப் பிறகு ‘ஓம்’ படத்தின் டிரெய்லர் வெளியானது. ஆன்லைனில் வெளியிடப்படாத நிலையில், திரையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எல்ஈடி திரைகளில் மட்டும் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இருப்பினும் இந்த டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது.