பாலா நடித்த 'காந்தி கண்ணாடி' படத்தின் டிரெய்லர் வெளியீடு

கே.பி.ஒய் பாலா நடித்துள்ள 'காந்தி கண்ணாடி' படம் வருகிற செப்டம்பர் 5ந் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
சின்னத்திரையில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் கே.பி.ஒய்.பாலா. தனது காமெடியான ஒன்லைனர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரை வெள்ளித்திரையில் நடித்து வந்தாலும், பாலா சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது பலரின் கவனத்தை ஈர்த்தது.
இவர் இயக்குநர் ஷெரீப்பின் புதியப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். இந்தப் படத்தில் நடிகை நமிதா கிருஷ்ணமூர்த்தி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை சக்தி பிலிம்ஸ் பேக்டரி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘காந்தி கண்ணாடி’ படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. நேற்று வெளியான டிரெய்லர் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.






