ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள 'பார்க்கிங்' படத்தின் டிரைலர் வெளியானது..!

'பார்க்கிங்' திரைப்படம் டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள 'பார்க்கிங்' படத்தின் டிரைலர் வெளியானது..!
Published on

சென்னை,

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள திரைப்படம் 'பார்க்கிங்'. திரில்லர் டிராமாவான இந்த திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்துள்ளார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

பார்க்கிங்கால் ஏற்படும் பிரச்சனையை விவரிக்கும் விதமாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில், 'பார்க்கிங்' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'பார்க்கிங்' திரைப்படம் டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com