

சென்னை,
'வாமனன்', 'என்றென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய அகமது, அடுத்ததாக நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் 'இறைவன்' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறைவடைந்தது. தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 'இறைவன்' படம் ஆகஸ்ட் 25-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியானது. ஆனால் படம் வெளியாகவில்லை.
இந்நிலையில், வரும் செப்டம்பர் 3-ந்தேதி(நாளை) 'இறைவன்' படத்தின் டிரெய்லர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த டிரெய்லரில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Jayam Ravi (@actor_jayamravi) September 1, 2023 ">Also Read: