சமுத்திரக்கனி, தம்பி ராமையா நடித்துள்ள "ராஜாகிளி" படத்தின் டிரெய்லர் வெளியீடு

"ராஜாகிளி" படம் வருகிற டிசம்பர் மாதம் 13-ந் தேதி வெளியாக உள்ளது.
சமுத்திரக்கனி, தம்பி ராமையா நடித்துள்ள "ராஜாகிளி" படத்தின் டிரெய்லர் வெளியீடு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களாக வலம் வருபவர்கள் சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா. இவர்கள் இருவரும் ஏற்கனவே 'அப்பா , சாட்டை, விநோதய சித்தம்' போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர். இவர்கள் இருவரும் இணைந்து ராஜா கிளி எனும் திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு தம்பி ராமையா கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார்.

இப்படத்தை தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கியுள்ளார். வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், பழ கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், ரேஷ்மா, டெப்பா, ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 50-வயதைக் கடந்த தொழிலதிபர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருக்கிறது.

இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்த நிலையில், நவம்பர் 29-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என படக்குழு அறிவிருந்தது. ஆனால் ஒரு சில காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டு ரிலீஸ் தேதி அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 13-ந் தேதி வெளியாக உள்ளது. மேலும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லரும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com