இன்று வெளியாகிறது 'சிங்கப்பூர் சலூன்' படத்தின் டிரைலர்

'சிங்கப்பூர் சலூன்' திரைப்படம் வருகிற 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இன்று வெளியாகிறது 'சிங்கப்பூர் சலூன்' படத்தின் டிரைலர்
Published on

சென்னை,

'ரவுத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'சிங்கப்பூர் சலூன்'. இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி சிகையலங்கார நிபுணராக நடித்துள்ளார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார்.

இந்த படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர். இந்த படத்தில் சத்யராஜ், லால், ரோபோ சங்கர், கிஷன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 'சிங்கப்பூர் சலூன்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com