'2கே லவ் ஸ்டோரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு

2கே லவ் ஸ்டோரி படத்தின் டிரெய்லரை விஷ்ணுவிஷால் மற்றும் சூரி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
'2கே லவ் ஸ்டோரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு
Published on

சென்னை,

வெண்ணிலா கபடிக்குழு படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் சுசீந்திரன். இவர் "நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா, ஈஸ்வரன்" ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படமாக, ரொமான்ஸ் ஜானரில் '2கே லவ் ஸ்டோரி' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். மேலும் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி வைரலானது. இந்த படத்துக்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது. திருமணத்திற்கு புகைப்படம் எடுக்கும் இளைஞர்கள் குழுவின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லரை நடிகர் விஷ்ணுவிஷாலும் நடிகர் சூரியும் தங்களின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com