லோகேஷ் கனகராஜ் தயாரித்த 'மிஸ்டர் பாரத்' படத்தின் டிரெய்லர் வெளியீடு

இயக்குநர் நிரஞ்சன் இயக்கியுள்ள இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 11ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.
லோகேஷ் கனகராஜ் தயாரித்த 'மிஸ்டர் பாரத்' படத்தின் டிரெய்லர் வெளியீடு
Published on: 

சென்னை,

இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில், இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இயக்குநராக மட்டுமின்றி, தனது ஜிஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். அந்த வகையில், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ படத்தைத் தொடர்ந்து, பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘மிஸ்டர் பாரத்’ என்ற புதிய படத்தையும் அவர் தயாரித்துள்ளார்.

யூடியூபர் பாரத் கதாநாயகன்

இப்படத்தில் பிரபல யூடியூபர் பாரத் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குநர் நிரஞ்சன் இயக்கியுள்ள இப்படத்தில் ‘கட்சி சேர’ பாடல் மூலம் பிரபலமான சம்யுக்தா விஸ்வநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பால சரவணன், நிதி பிரதீப், லிங்கா, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு

சுவாரஸ்யமான காதல் மற்றும் நகைச்சுவை கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம் அக்டோபர் 1-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் 11ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

டிரெய்லர் வெளியீடு

இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில், இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X