'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' படத்தின் டிரெய்லர் வெளியீடு

பிக் பாஸ் லாஸ்லியா நடித்துள்ள 'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' படம் வருகிற 24-ந் தேதி வெளியாக உள்ளது.
'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' படத்தின் டிரெய்லர் வெளியீடு
Published on

சென்னை,

பிரபலமான தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் 1985 முதல் படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறது. இந்த நிறுவனம் தயாரித்த விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கடுத்து 2023-ல் தயாரித்த 'வல்லவனுக்கும் வல்லவன்' கலவையான விமர்சனங்களை பெற்றன. தற்போது இந்த தயாரிப்பு நிறுவனம் 'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' என்ற படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமடைந்த லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் 'பிரன்ட்ஷிப், கூகுள் குட்டப்பா' ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஹரி பாஸ்கர் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 101-வது படமான இதை, ஹேமா ருக்மணி தயாரித்துள்ளார். இப்படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி வைரலாகின. இப்படம் வரும் 24-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com