'ஜுமாஞ்சி: ஓபன் வேர்ல்டு' படத்தின் டிரெய்லர் வெளியீடு

'ஜுமாஞ்சி: ஓபன் வேர்ல்டு' திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதி வெளியாகிறது.

'ஜுமாஞ்சி: ஓபன் வேர்ல்டு' படத்தின் டிரெய்லர் வெளியீடு
Published on

ஹாலிவுட்டின் பிரபல சாகசத் திரைப்படத் தொடரான 'ஜுமாஞ்சி'யின் புதிய படமான 'ஜுமாஞ்சி: ஓபன் வேர்ல்டு' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் டுவெய்ன் ஜான்சன், கெவின் ஹார்ட், ஜாக் பிளாக், கரேன் கில்லன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் மீண்டும் இணைந்துள்ளனர். முந்தைய பாகங்களை இயக்கிய இயக்குநர் ஜேக் காஸ்டன் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். இந்தப் படம், நவீன 'ஜுமாஞ்சி' தொடரின் இறுதிப் பகுதியாக உருவாகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி சாகசம்

"ஒன் லாஸ்ட் கேம்" என்ற வாசகத்துடன் வெளியான இந்த டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முந்தைய படங்களைப் போல கதாபாத்திரங்கள் விளையாட்டுக்குள் செல்வதற்கு பதிலாக, இந்த முறை ஜுமாஞ்சி உலகமே நிஜ உலகிற்குள் நுழைந்து பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக கதை அமைந்துள்ளது.

ஷாருக்கானின் 'கிங்' படத்துடன் மோதல்

'ஜுமாஞ்சி: ஓபன் வேர்ல்டு' திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதி வெளியாகிறது. இதே காலகட்டத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள 'கிங்' திரைப்படமும் வெளியாக இருப்பதால், சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் இரு படங்களுக்கும் போட்டி உருவாகும் என திரையுலகில் எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com