"சட்டமும் நீதியும்" வெப் தொடரின் டிரெய்லர் வெளியீடு

சரவணன் நடித்துள்ள சட்டமும் நீதியும் வெப் தொடர் ஜீ5 தளத்தில் வெளியாகிறது.
சென்னை,
தமிழ் சினிமாவில் 90 காலக்கட்டங்களில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் சரவணன். அதன்பிறகு சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்தார். பின்னர் மீண்டும் பருத்தி வீரன் படத்தில் கார்த்தியின் சித்தப்பாவாக ரீ என்ட்ரி கொடுத்தார்.
இந்தநிலையில், 15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் வெப் தொடரின் மூலம் ஹீரோவாக திரும்பியிருக்கிறார் நடிகர் சரவணன். அதாவது, சசிகலா பிரபாகரன் தயாரிப்பில் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள "சட்டமும் நீதியும்" என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக நம்ரிதா நடித்திருக்கிறார்.
இந்த வெப் தொடர் வருகிற 18ம் தேதி முதல் ஜீ5 தளத்தில் வெளியாகிறது. இந்நிலையில், 'சட்டமும் நீதியும்' என்ற வெப் தொடரின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story






