கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள திரில்லர் வெப் சீரீஸின் டிரெய்லர் வெளியீடு

இந்த வெப் சீரிஸ் வருகிற 18-ந் தேதி ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள திரில்லர் வெப் சீரீஸின் டிரெய்லர் வெளியீடு
Published on

சென்னை,

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ள புதிய திரில்லர் வெப் சீரிஸ் 'ஸ்னேக்ஸ் அண்டு லேடர்ஸ்'. இது பரத் முரளிதரன், அசோக் வீரப்பன், கமலா அல்கிமிஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இதில் நவீன் சாந்ரா, நந்தா, மனோஜ் பாரதிராஜா, முத்துக்குமார், ஸ்ரீந்தா, ஸ்ரீஜித் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரில்லர் கதை களத்தில் உருவாகி உள்ள 'ஸ்னேக்ஸ் & லேடர்ஸ்' சீரிஸ் வெளியாகும் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பிரபல ஓ.டி.டி தளமான பிரைம் வீடியோவில் வரும் 18-ந் தேதி முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், தற்போது இந்த வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. பள்ளி மாணவர்கள் நான்கு பேரின் சாகச பயணத்தில் நடைபெறும் விபரீதம், அதன் பின்னணியில் உள்ள மனிதர்கள் மற்றும் அதன் பின் நடைபெறும் பிரச்சினைகள் ஆகியவை இந்த வெப் சீரிஸின் கதையாகும். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com