சந்தோஷ் பிரதாப் நடிக்கும் ‘சிக்னல் அட் 11.30’ படத்தின் டிரெய்லர் வெளியீடு

சந்தோஷ் பிரதாப், பவ்யா திரி​கா நடிக்கும் ‘சிக்னல் அட் 11.30’ படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
சந்தோஷ் பிரதாப் நடிக்கும் ‘சிக்னல் அட் 11.30’ படத்தின் டிரெய்லர் வெளியீடு
Published on: 

சென்னை,

நடிகர் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

காதல் கலந்த மர்மத் திரில்லர்

மலர்விழி நடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ளார். பவ்யா திரிகா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும், பூஜிதா பொன்னடா, ஜெயபிரகாஷ், முனிஷ்காந்த், ஆர்யன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அலர் ஸ்டூடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் ஷிவானி சுப்பிரமணி இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.

நள்ளிரவில் நடக்கும் மர்ம சம்பவம்

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு காதல் மற்றும் மர்மம் கலந்த திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. நள்ளிரவில் நடைபெறும் ஒரு பயணத்தின்போது, சரியாக 11.30 மணிக்கு போக்குவரத்து சிக்னல் ஒன்றில் கதாநாயகனுக்கு எதிர்பாராத மர்மமான சம்பவம் நிகழ்கிறது. அந்தச் சம்பவம் அவரது வாழ்க்கைப் பாதையையே மாற்றியமைக்கிறது. அதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன என்பதே படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளது.

வெளியாகி கவனம் ஈர்க்கும் டிரெய்லர்

இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. மர்மமான சம்பவங்கள், காதல் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த காட்சிகளுடன் வெளியாகியுள்ள டிரெய்லர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. திரையரங்குகளில் விரைவில் வெளியாக உள்ள இப்படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான திரில்லர் அனுபவத்தை வழங்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

X