அபர்ணதி நடிக்கும் 'வெஞ்சென்ஸ்' படத்தின் டிரெய்லர் அப்டேட்

இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அபர்ணதி நடிக்கும் 'வெஞ்சென்ஸ்' படத்தின் டிரெய்லர் அப்டேட்
Published on

சென்னை,

சின்னத்திரையில் `எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவனம் பெற்றவர் நடிகை அபர்ணதி. இதைத்தொடர்ந்து `தேன்', `ஜெயில்' போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த இரண்டு படங்களுக்காக பல்வேறு விருதுகளை வென்றார். இதையடுத்து அபர்ணதி `இறுகப்பற்று' படத்தில் கடைசியாக நடிந்திருந்தார். அதில் அவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்த நிலையில் இவர் தற்போது அறிமுக இயக்குனர் ராகுல் அசோக் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். இப்படத்திற்கு 'வெஞ்சென்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏசி புரொடக்சன் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு அருண் ராஜ் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த படத்தின் டிரெய்லர் இன்று மதியம் 12 மணியளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com