திரிப்தி டிம்ரி நடித்த டார்க் காமெடி படத்தின் டிரெய்லர் அப்டேட்

திரிப்தி டிம்ரி நடித்துள்ள 'மா பெஹன்' என்ற படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது.
 திரிப்தி டிம்ரி நடித்த டார்க் காமெடி படத்தின் டிரெய்லர் அப்டேட்
Published on

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிப்தி டிம்ரி கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 'மாம்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான 'அனிமல்' படத்தில் நடித்து பிரபலமானார்.

இவர் தற்போது, இயக்குனர் சுரேஷ் திரிவேணி இயக்கத்தில் மா பெஹன் என்ற டார்க் காமெடி திரில்லர் படத்தில் நடித்துள்ளார். மேலும், மாதுரி தீட்சித், தர்னா துர்கா மற்றும் ரவி கிஷன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஒரு இரவு சமையலறையில் மர்மமான சடலத்தை கண்டுபிடிக்கும் அவர்கள், அதை அக்கம் பக்கத்தினருக்கு தெரியாமல் மறைக்க முயற்சிக்கிறார்கள். இதனால் அவர்களின் வாழ்க்கையில் பரபரப்பும் நகைச்சுவையும் கலந்த சம்பவங்களாக உருவாகியுள்ளது.

இந்த படம் மாதுரி தீட்சித் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற ஜூன் 4ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, நாளை இந்த படத்தின் டிரெய்லர் நெட்பிளிக்ஸில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com