ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் `மீசைய முறுக்கு 2' படத்தின் டிரெய்லர் அப்டேட்

ஹிப்ஹாப் ஆதி இரட்டை வேடங்களில் நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ படம் செப்டம்பர் 25ம் தேதி வெளியாகவுள்ளது.

ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் `மீசைய முறுக்கு 2' படத்தின் டிரெய்லர் அப்டேட்
Published on

சென்னை,

ஹிப்ஹாப் தமிழா ஆதி, சைத்ரா ஜே ஆச்சார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கும் `மீசையை முறுக்கு 2' திரைப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியிசை துறையில் ராப் பாடகராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. பின்னர் இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். 'ஆம்பள', 'தனி ஒருவன்', 'அரண்மனை' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த அவர், கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான 'மீசையை முறுக்கு' திரைப்படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 'நட்பே துணை', 'நான் சிரித்தால்', 'சிவகுமாரின் சபதம்', 'அன்பறிவு' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

முதல் பாக வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம்

கல்லூரி மாணவனின் கனவு, காதல், வாழ்க்கைப் போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவான ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘மீசைய முறுக்கு 2’ படத்தை ஹிப் ஹாப் ஆதி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நட்சத்திர பட்டாளம்

சுந்தர் சி - குஷ்பு தயாரிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் சைத்ரா, கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் கேத்திகா ஷர்மா, யூடியூபர் ஹர்ஷத் கான், நாசர், கருணாஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.

டீசர், பாடல்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு

முன்னதாக வெளியான ‘மீசைய முறுக்கு 2’படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

டிரெய்லர் அப்டேட்

‘மீசைய முறுக்கு 2’ படம் செப்டம்பர் 25ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை (12ந் தேதி) இப்படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com