'விடாமுயற்சி' படத்தின் டிரெய்லர் அப்டேட்


விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் அப்டேட்
x

அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாக உள்ளது.

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாக உள்ளது.

இந்நிலையில், நடிகர் அஜித்குமாரின் 'விடாமுயற்சி' படத்தின் டீசர் கடந்த மாதம் 28-ந் தேதி வெளியானது. டீசரில் எல்லோரும் எல்லாமும் கைவிடும்போது உன்னை நம்பு... என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இப்படம் ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.

சமீபத்தில் நடிகர் அஜித்குமார் டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளார். இதற்கிடையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இறுதிகட்ட படப்பிடிப்பு பணிக்காக அஜித்குமார் தற்போது பாங்காக் சென்றுள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டு பண்டிகையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் படத்தின் டிரெய்லரை எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.

1 More update

Next Story