'அந்த தைரியம் அவரிடம் உள்ளது' - பிரியங்கா சோப்ராவை பாராட்டிய திரிப்தி டிம்ரி

பிரியங்கா சோப்ரா தைரியத்தோடு வேறொரு நாட்டிற்கு சென்று மீண்டும் கெரியரை தொடங்க வேண்டும் என்று திரிப்தி டிம்ரி கூறினார்.
'அந்த தைரியம் அவரிடம் உள்ளது' - பிரியங்கா சோப்ராவை பாராட்டிய திரிப்தி டிம்ரி
Published on

மும்பை,

நடிகை திரிப்தி டிம்ரி பேட்டி ஒன்றில் பிரியங்கா சோப்ராவை பாராட்டி பேசியுள்ளார். அந்த பேட்டியில் அவரிடம் உங்களுக்கு பிரியங்காவிடம் பிடித்த ஒரு விசயம் என்ன என்று கேட்கப்பட்டது அதற்கு அவர்,

பிரியங்கா சோப்ரா மிகவும் தன்னம்பிக்கை உடைய மனிதர். இதன்மூலம் தைரியத்தோடு வேறொரு நாட்டிற்கு சென்று மீண்டும் கெரியரை தொடங்க வேண்டும். அந்த தைரியம் அவரிடம் உள்ளது என்று நினைக்கிறேன்.

அவரிடம் இருந்து கத்துக்கொள்ள நிறைய விசயங்கள் உள்ளன. அனைத்து படங்களிலும் அவர் சிறப்பாக நடிப்பார், குறிப்பாக அவர் நடித்த பார்பி மிகவும் சிறப்பாக இருந்தது. பார்பி படத்தில் அவரை என்னால் அடையாளம் காண முடியவில்லை. நானும் அந்த திறனை வளர்த்துக்கொள்ள விரும்புகிறேன். நான் ஒரு புது படத்தில் நடித்தால் மக்கள் என்னை பார்த்து இது திரிப்தி இல்லை என்று சொல்ல வேண்டும். அதுதான் ஒரு நடிகருக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக இருக்கும் என்று நினைக்கிறேன். இவ்வாறு கூறினார்.

இதற்கு முன்னதாகவும் திரிப்தி, சோப்ராவை பாராட்டி பேசியிருக்கிறார். அப்போது அவர் கூறியதாவது,

பிரியங்கா சோப்ரா வாழ்க்கையை நகர்த்திச்செல்லும் முறை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் சொந்த வாழக்கையையும் நடிப்பதையும் சமநிலையில் செய்து வருகிறார். அவர் கடினமான நேரத்திலும் நிதானமாக செயல்படுவார். அந்த திறன் என்னிடம் இல்லை. இது என்னை மிகவும் ஈர்த்தது. அவர் மிகவும் திறமை வாய்ந்தவர். எந்த கதாபாத்திரத்திலும் திறமையாக நடிப்பார். இவ்வாறு கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com