நடனத்தால் ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளான நடிகை

திரிப்தி டிம்ரி 'விக்கி வித்யா கா வோ வாலா வீடியோ' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
Triptii Dimri trool for dance moves in 'Mere Mehboob'
Published on

சென்னை,

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையான திரிப்தி டிம்ரி கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த 'மாம்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்

அதனைத்தொடர்ந்து, ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான 'அனிமல்' படத்தில் நடித்து புகழ் பெற்றார். சமீபத்தில், விக்கி கவுசல் ஜோடியாக 'பேட் நியூஸ்' படத்தில் நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது, ராஜ்குமார் ராவுடன் இணைந்து 'விக்கி வித்யா கா வோ வாலா வீடியோ' என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அடுத்த மாதம் 11-ம் தேதி திரைக்கு வரவுள்ளநிலையில், இப்படத்திலிருந்து 'மேரே மெஹ்பூப்' என்ற பாடல் வெளியாகி உள்ளது.

ஷில்பா ராவ் இப்பாடலை பாட நடன இயக்குனராக கணேஷ் ஆச்சார்யா செயல்பட்டார். இந்நிலையில், இப்பாடலில் நடனமாடியிருந்த திரிப்தி டிம்ரி ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இதில் திரிப்தி டிம்ரியின் நடனம் மிகவும் முகம் சுளிக்கும் வகையில் இருப்பதாக விமர்சிக்கும் ரசிகர்கள் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யாவையும் கடுமையாக சாடியுள்ளனர்.

View this post on Instagram

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com