

சென்னை,
விஜய் - திரிஷா ஆகியோர் சமீபத்தில் ஒரு திருமண விழாவில் ஒன்றாக பங்கேற்றது விவாத பொருளானது. தவெக தலைவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பானது.
இந்தநிலையில் சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு திருமண விழாவில் விஜய்யும், திரிஷாவும் ஒன்றாக பங்கேற்ற விவகாரம் சர்ச்சையானது.
சர்சைகளுக்கு மத்தியில் நடிகை திரிஷா சென்னையில் இருந்து மும்பை செல்வதற்காக இன்று காலை விமான நிலையம் வந்தார். அவரிடம் தவெக தலைவர் விஜய்யும் நீங்கள் இருவரும் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து உங்களது கருத்து என்ன? என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். கேள்விகளுக்கு திரிஷா எந்தவித பதிலும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு வேக வேகமாக விமான நிலையத்திற்குள் சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.