திரிஷா படம் மீண்டும் தள்ளி வைப்பு

திரிஷா நடித்துள்ள ‘பரமபதம் விளையாட்டு’ படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்காததால் தள்ளிவைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
திரிஷா படம் மீண்டும் தள்ளி வைப்பு
Published on

திருஞானம் இயக்கத்தில் திரிஷா நடித்துள்ள படம் பரமபதம் விளையாட்டு. இதில் நந்தா, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் முதல்-மந்திரிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டராக திரிஷா வருகிறார்.

மருத்துவ அறிக்கையை மாற்றி எழுதும்படி திரிஷாவை சிலர் வற்புறுத்துவதும், அதற்கு மறுப்பதால் அவருக்கு நேரும் ஆபத்துகளையும் வைத்து திகில் படமாக எடுத்துள்ளனர். தணிக்கை குழு யுஏ சான்றிதழ் அளித்துள்ளது. படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடந்தபோது திரிஷா பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

விழாவில் பேசியவர்கள் திரிஷா சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை திருப்பி வாங்க வேண்டும் என்றனர். பரமபதம் விளையாட்டு படம் கடந்த ஜனவரி 31-ந்தேதி ரிலீசாகும் என்று அறிவித்து கடைசி நேரத்தில் தள்ளிப்போனது. பின்னர் நேற்று (28-ந்தேதி) திரைக்கு வரும் என்று விளம்பரம் செய்தனர். ஆனால் படம் ரிலீசாகவில்லை.

படத்துக்கு எதிர்பார்த்த தியேட்டர்கள் கிடைக்காததால் தள்ளி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. பட விழாவில் திரிஷா பங்கேற்காததால்தான் தியேட்டர் எண்ணிக்கை குறைந்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com