

பிரபலங்கள் பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் என்பதற்காக அவர்களின் தனிப்பட்ட தருணங்களை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்வது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, தற்போது லண்டனில் தனது தோழிகளுடன் ஓய்வு நேரத்தை மகிழ்ச்சியாக கழித்து வருகிறார். இந்த நிலையில், அவர் அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் அமர்ந்திருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
திரிஷாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், அவரது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் என சில நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், பிரபலங்கள் பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் என்பதற்காக அவர்களின் தனிப்பட்ட தருணங்களை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்வது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் திரிஷாவின் வைரல் வீடியோ தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதம் உருவாகியுள்ளது.
இதனிடையே, திரிஷா தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அடுத்ததாக சிரஞ்சீவியுடன் ‘விஸ்வம்பரா’ திரைப்படத்தில் நடிக்கிறார். வசிஷ்டா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் வெளியீடு குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
திரிஷா கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், உலக அளவில் பல்வேறு நாடுகளிலும் வெளியானது. படம் வசூலிலும் சிறப்பான வரவேற்பைப் பெற்றதாக கூறப்படுகிறது.