“மௌனம் பேசியதே’ ரீ-ரிலீஸை ஒட்டி திரிஷா வெளியிட்ட வீடியோ

சூர்யா, திரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘மௌனம் பேசியதே’ படம் நாளை ரீ-ரிலீஸாகிறது.
“மௌனம் பேசியதே’ ரீ-ரிலீஸை ஒட்டி  திரிஷா வெளியிட்ட வீடியோ
Published on

சென்னை,

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'நாயகன்', 'வேட்டையாடு விளையாடு', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜய்யின் 'கில்லி', 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', 'அஞ்சான்', தனுஷின் 'யாரடி நீ மோகினி', சேரனின் 'ஆட்டோகிராப்' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

இந்த நிலையில், 24 ஆண்டுகளுக்கு முன் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ‘மௌனம் பேசியதே’ படம் மீண்டும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது. அதன்படி, இந்த படம் வருகிற 13ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தை 2002-ம் ஆண்டு அமீர் இயக்கி இருந்தார். திரிஷா, லைலா, நந்தா, நேஹா பெண்ட்ஸ் என பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இன்றும் கூட ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு ‘மௌனம் பேசியதே’ ரீ-ரிலிஸ் குறித்து சூர்யா லைலா வீடியோ வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், ‘மெளனம் பேசியதே’ திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆவதை முன்னிட்டு, வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு நடிகை திரிஷா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “என்னுடைய முதல் படமான ‘மௌனம் பேசியதே’ நாளை ரீ- ரிலீஸ் ஆகப்போகிறது.கண்டிப்பாக எல்லோரும் தியேட்டருக்கு சென்று பாருங்கள். காதலர் தின வாரத்தில் வெளியாவதால் இந்தப் படம் ஸ்பெஷலாக இருக்கிறது. எப்போதுமே இந்தப் படம் எனக்கு ஸ்பெஷலான படம் தான். ஏனென்றால் இந்தப் படத்தில் இருந்துதான் எனக்கு எல்லாமே தொடங்கியது. என்னுடைய முதல் வருட சினிமாவில் அமீர் சாருடன் பணியாற்றி இருக்கிறேன்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வீட்டில் இருப்பது போலவே உணர்ந்தேன். என்னுடைய முதல் ரிலீஸ் சூர்யாவுடன் தான் நடந்திருக்கிறது. இப்போது என்னுடைய அடுத்த படத்தின் (கருப்பு) ரிலீஸும் சூர்யாவுடன் தான் நடக்கிறது. லைலாவுடன் பணியாற்றியதும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகள். படத்தைப் பாருங்கள். என்ஜாய் பண்ணுங்கள்” என்று நெகிழ்ச்சியாக வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com