

சென்னை,
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, 'ஜெயம்' ரவி உள்ளிட்டப் பலரது நடிப்பில் வெளியாகி 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வெற்றிப் பெற்றது. முதல் பாகத்திலேயே 500 கோடிக்கும் அதிகமான வசூலை உலகம் முழுவதும் இந்தத் திரைப்படம் பெற்றிருக்கிறது.
இதில் குந்தவை கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷா நடித்திருந்தார். படத்தின் புரோமோஷன்களில் ஆரம்பித்து இந்தப் படத்தில் இவரது நடிப்பு, உடை என 'பொன்னியின் செல்வன்' பட சமயத்தில் இணையம் முழுக்கவே த்ரிஷா ஆக்கிரமித்து இருந்தார்.
'விண்ணைத் தாண்டி வருவாயா', '96', ஆகிய படங்களுக்குப் பிறகு 'பொன்னியின் செல்வன்' குந்தவை கதாபாத்திரம் த்ரிஷாவின் பயணத்தில் சிறப்பாக அமைந்த ஒன்றாகப் பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் தனது பேனர் ஒன்றிற்கு குழந்தை ஒன்று முத்தமிடும் வீடியோவினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை த்ரிஷா. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த விடியோவிற்கு ரசிகர்கள், "இளைய பிராட்டி குந்தவைக்கு யார் தான் முத்தம் கொடுக்க மாட்டார்கள்" என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram