என் கனவில நீ முழிக்கிறியே ஏ அடடா... கில்லி பாடலின் நடன வீடியோவை பகிர்ந்த திரிஷா

திரிஷா வரும் 4 ஆம் தேதி தனது 42 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
என் கனவில நீ முழிக்கிறியே ஏ அடடா...  கில்லி பாடலின் நடன வீடியோவை பகிர்ந்த திரிஷா
Published on

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை திரிஷா. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள திரிஷா, வரும் 4 ஆம் தேதி தனது 42- வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். மே 1 ஆம் தேதியான நேற்று, "மே எனது மாதம்" என்று தனது இன்ஸ்டாவில் ஸ்டோரீஸ் ஒன்றை பதிவிட்டிருந்தார். தனது பிறந்த நாளை ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் விதமாக இந்த பதிவை திரிஷா வெளியிட்டதாக தெரிகிறது

இந்த நிலையில், இன்று திரிஷா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள ஸ்டோரீஸ் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே தீயாய் பரவி வருகிறது. கில்லி படத்தில் இடம் பெற்று மெகா ஹிட் ஆன "அப்படிப்போடு போடு" பாடலுக்கு சிறுவர், சிறுமியர்கள் ஸ்டேஜ் ஒன்றில் நடனம் ஆடும் வீடியோவை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். திரிஷாவின் இந்த பதிவை அவரது ரசிகர்கள் இன்ஸ்டகிராமில் பகிர்ந்து வருகிறார்கள்.

தற்போது, நடிகர் சூர்யாவுடன் கருப்பு திரைப்படத்தில் திரிஷா நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதில், ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் திரிஷா நடித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com