புதிய டைரக்டருடன் திரிஷா

அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் உருவாகும்‘தி ரோட் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் த்ரிஷா.
புதிய டைரக்டருடன் திரிஷா
Published on

தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி கதாநாயகியாக நிலைத்து நிற்பவர், திரிஷா. இவர், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன்' மற்றும் மலையாளத்தில் ராம்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

திரிஷா தமிழில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். படத்துக்கு தி ரோட்' என பெயர் சூட்டி இருக்கிறார்கள். அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் டைரக்டு செய்கிறார். சார்பட்டா' படத்தில் நடித்த சபீர் (டான்ஸிங் ரோஸ்), சந்தோஷ் பிரதாப் (ராமன்), மியா ஜார்ஜ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியானது. திரிஷாவின் பிறந்தநாளையொட்டி புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியானதால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com