'"தக் லைப்" படத்தில் திரிஷாவின் கதாபாத்திரம் இதுதான்' - மணிரத்னம்


Trishas character in ThugLife will be completely opposite from Kundavai - ManiRatnam
x

திரிஷா நடனத்தில் ’சுகர் பேபி’ பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது.

சென்னை,

"தக் லைப்" படத்தில் திரிஷாவின் கதாபாத்திரம் பொன்னியின் செல்வனுக்கு முற்றிலும் நேர்மாறாக இருக்கும் என்று மணிரத்னம் கூறியுள்ளார்.

36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப். இதில் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக், பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' வெளியாகி வைரலானநிலையில், தற்போது திரிஷா நடனத்தில் 'சுகர் பேபி' என்ற 2-வது பாடல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம், திரிஷாவின் கதாபாத்திரத்தை பற்றி கூறியுள்ளார். அவர் கூறுகையில்,

'"தக் லைப்" படத்தில் திரிஷாவின் கதாபாத்திரம் பொன்னியின் செல்வனுக்கு முற்றிலும் நேர்மாறாக இருக்கும். நான் அவரிடம் இந்த படத்தில் உங்களில் கதாபாத்திரம் குந்தவைக்கு நேர்மாறாக இருக்கும் என்று சொன்னேன், திரிஷாவும் அதற்கு ஒப்புக்கொண்டார். இந்த படத்தின் களம், அமைப்பு எல்லாமே வேறு' என்றார்.

1 More update

Next Story