விரைவில் திரிஷ்யம் படம் 3-ம் பாகம்

விரைவில் திரிஷ்யம் படம் 3-ம் பாகம்
Published on

மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து ரூ.5 கோடி செலவில் தயாரான 'திரிஷ்யம்' மலையாள படம் 2013-ல் திரைக்கு வந்து ரூ.75 கோடி வசூலித்து இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டும் வரவேற்பை பெற்றது.

தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது. தொடர்ந்து 'திரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் வந்தது. இந்த படமும் ரசிகர்களை கவர்ந்தது. அடுத்து திரிஷ்யம் படத்தின் 3-ம் பாகத்தை எடுக்கும் முயற்சிகளில் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப்பும், மோகன்லாலும் ஈடுபட்டு உள்ளனர்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இது திரிஷ்யம் படத்தின் கடைசி பாகமாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. திரிஷ்யம் 3 -ம் பாகத்தை தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய அனைத்து மொழிகளிலும் அங்குள்ள முன்னணி நடிகர் நடிகைகளை நடிக்க வைத்து தனித்தனியாக இல்லாமல் ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் திரைக்கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.

இதன் மூலம் இன்னும் அதிக வசூல் பார்க்க முடியும் என்று கருதுகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com