தமிழ்நாட்டில் 'கேம் சேஞ்சர்' திரைப்படம் வெளியாவதில் சிக்கல்


Trouble with the release of the movie Game Changer in Tamil Nadu!
x

’கேம் சேஞ்சர்’ படம் தமிழ் நாட்டில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது

சென்னை,

இயக்குனர் ஷங்கர் தற்போது ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை இயக்கி உள்ளார். இப்படம் வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இப்படம் தமிழ் நாட்டில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதன்படி, ஷங்கர் இயக்கும் மற்றொரு திரைப்படமான இந்தியன் 3-யை முடித்துக்கொடுக்காமல் கேம் சேஞ்சர் படத்தை வெளியிடக்கூடாது என லைகா நிறுவனம் திரைத்துறை கூட்டமைப்பிடம் புகார் அளித்திருக்கிறது.

இந்தியன் 3' படத்தை முடிக்க ஷங்கர் மேலும் ரூ. 65 கோடி பட்ஜெட் கேட்பதாகவும், 'இந்தியன் 2ல் கடும் நஷ்டம் ஏற்பட்டதால், அவ்வளவு தொகை கொடுக்க முடியாது' எனவும் லைகா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 'கேம் சேஞ்சர்' படத்திற்கான திரையரங்க ஒப்பந்தம் இன்னும் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story