ஷங்கரின் மகளை பாராட்டிய ரோபோ சங்கரின் மகள்..! " வாழ்த்துகள் அக்கா... லவ் யூ ஸோ மச் தேனு..."

டைரக்டர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் முத்தையாவின் விருமன் படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார்.
ஷங்கரின் மகளை பாராட்டிய ரோபோ சங்கரின் மகள்..! " வாழ்த்துகள் அக்கா... லவ் யூ ஸோ மச் தேனு..."
Published on

சென்னை

விருமன் படத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், இந்திரஜாவுடன் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண் உள்பட பலர் நடித்துள்ளனர். கார்த்திக்கும் அவரது தந்தை பிரகாஷ்ராஜுக்கும் இடையிலான மோதல் படத்தில் பிரதானமாக வருவதாக சொல்லப்படுகிறது.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதன் முதல் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது.விருமன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

டைரக்டர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் முத்தையாவின் விருமன் படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். முதல்கட்ட படப்பிடிப்பின் போதே நடிப்பின் மீது காட்டிய ஈடுபாடு மற்றும் அனைவரிடமும் சகஜமாக பழகியது போன்ற குணங்களால் படக்குழுவினரின் பாராட்டைப் பெற்று உள்ளார். கார்த்தி நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவும் நடித்துள்ளார். இவர் பிகில் படத்திலும் நடித்திருந்தார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிதி ஷங்கருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள இந்திரஜா, உண்மையான நண்பர்கள் எப்போதும் ஆத்மார்த்தமாக இருப்பார்கள். அதிதி அக்கா... நாம் இருவரும் இந்த வாக்கியம் சொல்வது போலவே இருந்துள்ளோம். விருமன் படப்பிடிப்பில் நான் சந்தித்த ஒரு உண்மையான நல்ல உள்ளம். இன்னொரு தாயிடமிருந்து கிடைத்த சகோதரி. நம்முடைய விளையாட்டுகளையும், நகைச்சுவையையும் மிஸ் பண்ணுகிறேன். ஒரு பெரிய இயக்குனரின் மகள் என்பதை துளியும் உங்களிடம் பார்த்ததில்லை. மற்றவர்களிடமும் என்னிடமும் அத்தனை இணக்கமாக பழகினீர்கள். உங்களுடன் இருக்கையில் நான் சௌகரியமாக உணர்ந்தேன். இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியிருக்கிறது, சாதிக்க இருக்கிறது. வாழ்த்துகள் அக்கா... லவ் யூ ஸோ மச் தேனு... என்று உணர்ச்சிகரமாக எழுதியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com