'குறை கூறுவதை தவிர்த்து அனைத்து கட்சியினரும் உதவி செய்வதே உண்மையான அரசியல்' - தங்கர் பச்சான்

நடிகர்களும், அவரவர்களின் ரசிகர்களும் களத்தில் இறங்கி உதவினால் மக்களின் நிலைமை விரைவில் சீரடையும் என தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.
'குறை கூறுவதை தவிர்த்து அனைத்து கட்சியினரும் உதவி செய்வதே உண்மையான அரசியல்' - தங்கர் பச்சான்
Published on

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி, மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், உதவிக் கொண்டிருப்பவர்களை குறை கூறி அரசியல் ஆதாயம் தேடாதீர்கள் என இயக்குனர் தங்கர் பச்சான் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-

"மக்கள் வெள்ளத்துயரில் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளையில் உதவிக் கொண்டிருப்பவர்களை குறை கூறி அரசியல் ஆதாயம் தேடாதீர்கள். வேடிக்கைப் பார்த்துக்கொண்டு குறை கூறுவதை விட்டுவிட்டு அனைத்து கட்சியினர்களும் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது தான் உண்மையான அரசியல் பணியாகும்.

இவ்வேளையில் உச்ச நட்சத்திர திரைப்பட நடிகர்களும், அவரவர்களின் லட்சக்கணக்கான ரசிகர்களும் களத்தில் இறங்கி உதவினால் மக்களின் நிலைமை விரைவில் சீரடையும். இதை உடனே செய்தால்தான் உங்களை உயர்த்தி விடும் இந்த மக்களுக்கு நடிகர்களாகிய நீங்கள் செய்யும் நன்றி கடன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்."

இவ்வாறு தங்கர் பச்சான் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com