பாலிவுட் திரில்லரை புகழ்ந்த மணிரத்னம் - வைரலாகும் கருத்து

இந்த படத்தில் ஷனயா கபூர் மற்றும் ஆதர்ஷ் கவுரவ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாலிவுட் திரில்லரை புகழ்ந்த மணிரத்னம் - வைரலாகும் கருத்து
Published on

சென்னை,

பாலிவுட்டில் சமீபத்தில் வெளியான சர்வைவல் திரில்லர் திரைப்படமான ‘து யா மெய்ன்’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பெஜோய் நம்பியார் இயக்கியுள்ள இந்த படத்தில் ஷனயா கபூர் மற்றும் ஆதர்ஷ் கவுரவ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் சிறப்பு திரையிடல் தென்னிந்தியாவில் நடைபெற்றது. இதில் பிரபல இயக்குநர் மணிரத்னம் கலந்து கொண்டு படத்தை பார்த்தார். பின்னர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அவர், “பிஜோய் நம்பியார் இந்த படத்தில் வித்தியாசமான ஆற்றலை கொண்டு வந்துள்ளார். இப்படத்தை திரையரங்கில் பார்த்தால்தான் அதன் முழு அனுபவத்தை உணர முடியும்” என்று கூறினார்.

Also Read
“எங்கள் கண்ணீரில் சிலர் பணம் சம்பாதிக்கிறார்கள்” - நடிகை சுப்ரிதா வேதனை
பாலிவுட் திரில்லரை புகழ்ந்த மணிரத்னம் - வைரலாகும் கருத்து

சிறப்பு காட்சிக்குப் பிறகு பலரும் படத்தை பாராட்டினர். திகில் காட்சிகள், உணர்ச்சி மிக்க தருணங்கள் மற்றும் கதை சொல்லல் ஆகியவை படத்தின் முக்கிய பலங்களாக கூறப்படுகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com