தவெக வெற்றிக்கு இளைஞர்களின் எழுச்சிதான் காரணம் - லெஜெண்ட் சரவணன்

தவெக தலைவர் விஜய்க்கு பாலிவுட் நடிகர் லெஜெண்ட் சரவணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தவெக வெற்றிக்கு இளைஞர்களின் எழுச்சிதான் காரணம் - லெஜெண்ட் சரவணன்
Published on

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026 முடிவுகள் மாநில அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), இந்த தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க உள்ளது.

திமுகவை, தனது முதல் தேர்தலிலேயே விஜய் பின்னுக்குத் தள்ளியிருப்பது அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்திய விஜய், தற்போது தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளார்.

இந்தத் தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி முதலிடத்தில் உள்ளது. இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் (மெஜாரிட்டி) கிடைக்காததால், மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை விஜய் தொடங்கியுள்ளார்.

நடிகர் லெஜெண்ட் சரவணன் “விஜய் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றிக்கு இளைஞர்களின் எழுச்சி தான் காரணம். இந்த எழுச்சியை பார்த்து இந்தியாவே மிரண்டு உள்ளது. மக்கள் அவருக்கு மிகப்பெரிய பொறுப்பை வழங்கி உள்ளார்கள். இதனை அவருடன் இருப்பவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். ஜல்லிக்கட்டு போராட்டம் போன்ற எழுச்சி எதிரொலித்துள்ளது. தவெகவின் வெற்றி இந்தியாவிலேயே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்,

X

Daily Thanthi
www.dailythanthi.com