“இறந்துபோன இரண்டு யானைக் குட்டிகள்...” - மிஷ்கினின் வித்தியாசமான கனவு!

நேர்காணல் ஒன்றில் பேசிய மிஷ்கின், தனது கனவு குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.
“இறந்துபோன இரண்டு யானைக் குட்டிகள்...” - மிஷ்கினின் வித்தியாசமான கனவு!
Published on: 

சென்னை,

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியில் திரைப்படங்களை இயக்கி வருபவர் மிஷ்கின். இவர் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள ‘பிசாசு 2’ திரைப்படம் நீண்ட நாட்களாக வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இதற்கிடையே, மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘ட்ரெயின்’ திரைப்படமும் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.

“யானை இரண்டு குட்டிகளை கிணற்றில் போட்டது”

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய மிஷ்கின், தனது கனவு குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து மிஷ்கின் கூறுகையில், “பிசாசு 2 இன்னும் வெளியாகாததால், ‘ட்ரெயின்’ படத்தின் வெளியீடு குறித்த எண்ணமும் என் மனதில் நின்றுவிட்டது. சமீபத்தில் எனக்கு ஒரு கனவு வந்தது. அதில் ஒரு பெரிய யானை, இறந்துபோன தனது இரண்டு குட்டிகளைத் தூக்கிக்கொண்டு வந்து என் கிணற்றில் போட்டது. பின்னர், நான் வீட்டிற்குள் சென்று நிறைய பழங்களையும் தண்ணீரையும் கொண்டுவந்து அந்த யானையின் முன் சமர்ப்பித்தேன். அதோடு அந்தக் கனவு முடிந்தது.

“இரண்டு படங்களையும் உறவினர்களாக நினைத்தேன்”

அந்தக் கனவின் அர்த்தம் என்னவென்று சாட் ஜிபிடி-யிடம் கேட்டேன். இறந்துபோன அந்த இரண்டு குட்டிகளும், இறந்துபோய் என் மனதில் இருந்த இரண்டு நெருங்கிய உறவினர்களைக் குறிக்கலாம் என்று அது கூறியது.அப்போது அந்த இரண்டு உறவினர்களும் உண்மையில் என்னுடைய இரண்டு படங்களான ‘ட்ரெயின்’ மற்றும் ‘பிசாசு 2’ ஆக இருக்கலாம் என்று நினைத்தேன்” என மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

மிஷ்கின் இயக்கி இந்த படங்களின் வெளியீடுகள் தள்ளிப்போய் கொண்டே இருப்பது இவர்களது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தையே ஏற்படுத்தி வருகின்றன என்றே கூறலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com