ஒரே நாளில் வெளியாகும் சமுத்திரக்கனியின் இரண்டு படங்கள்

சமுத்திரக்கனி தமிழ் திரைத்துறை மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைத் துறைகளிலும் பணியாற்றி வருகிறார்.
ஒரே நாளில் வெளியாகும் சமுத்திரக்கனியின் இரண்டு படங்கள்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரக்கனி. இவர் தமிழ் திரைத்துறை மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைத் துறைகளிலும் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'கருடன், நந்தன், ஹிட் லிஸ்ட்' ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில், இவர் தற்போது இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். அந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளன. 'ராஜாகிளி, திரு மாணிக்கம்' ஆகிய இரண்டு படங்கள்தான் அவை.

அதில், இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ள திரைப்படம் 'திரு.மாணிக்கம்'. நடிகை அனன்யா இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குடும்ப கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் 27-ந் தேதி வெளியாக உள்ளது.

மற்றென்று, சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா இணைந்து நடித்துள்ள 'ராஜாகிளி' படம். இந்த படத்திற்கு தம்பி ராமையா கதை, வசனம் எழுதியுள்ளார். அவரது மகன் உமாபதி ராமையா இயக்கியுள்ளார். இதில் எம்.எஸ்.பாஸ்கர், பழ கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், ரேஷ்மா, டெப்பா, ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரித்துள்ளது. 50-வயதைக் கடந்த தொழிலதிபர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இப்படம் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com